நமது அமைப்பின் நிறுவனர் முரளி மோகன் அவர்கள். அவருடைய ஆன்மீக சிந்தனைகளாலும் போதனைகளாலும் மக்கள் அவரை குருஜி என்றும் அதேபோல அவருடைய வீரமிக்க இந்துத்துவக் கொள்கைகளால், அதனுடைய போராட்டங்களால், பின்வாங்காத பேச்சாற்றலால், இளைஞர்கள் அவரை எம் எம் ஜி என்றும் அழைக்க தொடங்கினர். இவரது 13 ஆண்டுகால ஹிந்துத்துவா கொள்கை போராட்டங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவருக்கு அன்புடன் MMji (Murali Mohan Guruji) என்ற பெயரை சூட்டினர். இன்று அவர் அனைவராலும் MMji @ முரளி மோகன் குருஜி என்று அழைக்கப்படுகிறார்.
இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில், ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே உழைப்பின் வழியே வளர்ந்து, இன்று ஓசூர் மாநகரத்தில் முன்னணி தொழிலதிபராகவும், சமூகத்தில் முக்கியமான நபராகவும் விளங்கி வருகிறார்.
குறிப்பாக, அயோத்தி ராமர் கோயில் அமைப்பதற்கான ராம ரத யாத்திரை ஓசூரில் வந்தபோது, அந்த ரதம் இவரது சொந்த மண்டபத்தில் 7 நாட்கள் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரின் செயல்பாடுகளுக்காக பல முறை கொலை மிரட்டல்கள் மற்றும் நேரடி தாக்குதல் முயற்சிகள் நடந்ததால், அரசாங்கம் அவருக்கு 24 மணி நேர ஆயுதபடை போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
இறுதியில், ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், இவர் ஹிந்து ஜனசேனா என்ற அமைப்பை நிறுவினார். இவர் ஆன்மீகத்தில் ஆழமாக ஈடுபட்டு அதை ஆராய்ந்து
இவரது ஆன்மீக ஆராய்ச்சி, விரிவுரைகளை கேட்டுப் பின்பற்ற உலகம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட சிஷ்யர்கள் இவரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வருகிறார்கள்.