ஹிந்து ஜன சேனா என்ற பெயரில் புதியதோர் இந்து அமைப்பு இன்று துவங்கப்பட்டது,இந்த இந்து அமைப்பு மகாகவி பாரதியாரின் பாரதமாதா கொள்கையை பின்பற்றியும், லோகமணியா பால கங்காதர திலக் அவர்களின் இந்து ஒற்றுமை கொள்கையை பின்பற்றியும், சத்ரபதி சிவாஜி அவர்களின் இந்து மக்களின் உரிமை கொள்கையை பின்பற்றியும்செயல்பட உள்ளது,
இந்த அமைப்பு ஓசூரை தலைமையாக கொண்டு தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டை தலைமையாகக் கொண்டு பாரதம் முழுவதும் செயல்பட உள்ளது, துவக்க விழாவான இன்று பாண்டிச்சேரி, தமிழ்நாடு கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர், இந்த அமைப்புக்கென்று இரண்டு வகையான சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டது,அமைப்பின் சீருடை பேரணி பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஓசூர் மாநகரத்தில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது இந்த துவாக்கு விழா நிகழ்ச்சியை அமைப்பின் நிறுவனத் தலைவர் mmji முரளி மோகன் தலைமை ஏற்று நடத்தினார் குருஜி கோல்வெல்கர் அறக்கட்டளை தலைவர் குருஜி சாது ரங்கராஜன்
அமைப்பின் பெயரை வெளியிட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் அமெரிக்கா சம்ஸ்கிருதி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த prof bvk சாஸ்திரி அவர்கள் அமைப்பின் சீருடை அறிமுகப்படுத்தி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அஷ்டாங்க யோகா நிறுவனர் சுரேஷ் கே நற்பவி, அகத்தியர் ஆன்மீக சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் திரு சொக்கலிங்கம் ஐயா, சிவசேனா மாநில செயலாளர் திரு வெங்கடேஷ், சிவசேனா மாநில விவசாய அணி செயலாளர் நஞ்சப்பா,
சிவ சேனா மாநில இளைஞரணி செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் இந்து ஜன சேனா தலைவராக காமன்தொட்டியை சேர்ந்த பாலா அவர்களும் செயலாளராக பேரிக்கை சேர்ந்த சீனிவாஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.